நன்றி உணர்வின் மனப்பான்மை

“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.”

தேவனோடு நாம் கொண்டுள்ள தனிப்பட்ட உறவு, நம்மை நன்றி உணர்வுள்ள வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும்.

நாம் எவ்வாறு நீதிமான்கள் ஆக்கப்பட்டுள்ளோம்?

எதைக் குறித்து நன்றி உணர்வோடு உள்ளீர்கள்?

எவ்வாறு நாம் தேவனோடு தனிப்பட்ட உறவில் வாழ முடியும்?

நன்றி உணர்வு என்பது நாம் தேர்ந்து கொள்வது

ஆலயத்திலும், நாம் செல்லும் மற்ற இடங்களிலும் எவ்வாறு நுழைய வேண்டும்?

நமக்கும், நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் இது எத்தகைய மாற்றத்தை உருவாகும்?

ஓர் புதிய வாழ்க்கை முறை

கிரேக்க மொழியில், சுத்தமாகுவதற்கும், ஆரோக்கியமாகுவதற்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உண்டு. “சுத்தமான” அனைவரும் உடலால் நலம்
அடைந்தவர்கள். “ஆரோக்கியமான” நபர் உடலால் மட்டுமல்ல ஆவியிலும், உணர்விலும் நலமடைந்தார்.

கிங் ஜேம்ஸ் வெர்ஷன் (King James Version-KJV) எனும் ஆங்கில மொழிபெயர்ப்பில் ‘cleansed’ (சுத்தமாக்கப்பட்ட) மற்றும் ‘whole’ (முழுமையான) எனும் வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

இயேசு, பத்து பேருக்கும் என்ன செய்தார்? ஏன்?

திரும்பி வந்த அந்த சமாரியன் பதிலின் தனித்துவம் என்ன?

என்ன ஆசீர்வாதங்களை அவர் பெற்றுக் கொண்டார்?

நண்பனிடம் கேள்

தேவன் உங்கள் வாழ்வில் செய்த எந்த காரியத்திற்காக நன்றியோடு உள்ளீர்கள்?

இந்த வாரம், எந்த சூழ்நிலையில் நன்றி உணர்வோடு உள்ளீர்கள்?

மாதிரி ஜெபம்

ஆண்டவரே, என் வாழ்வில் நீர் அளித்த ஆசீருக்காக நன்றி. எல்லா சூழ்நிலைகளிலும் நன்றியோடு இருக்க எனக்கு உதவும். நீர் எப்போதும் நல்லவராய் இருப்பதால், நான் எப்போதும் நன்றி நிறைந்த உள்ளதோடு இருக்க விரும்புகிறேன்.

வசனம்