நாம் எங்கு சென்றாலும், அந்த இடத்தில் நல்ல சூழலை உருவாக்கும் ஆற்றல் நமக்கு உண்டு என்பதை நீங்கள் அறிவீர்களா? நல்ல அணுகுமுறையைக் கையாள்வதால், நம்மால் எப்போதும் நல்ல சூழலை உருவாக்க முடியும்.
ஆற்றல்மிக்க அணுகுமுறையின் எடுத்துக்காட்டு
(23) அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள்.
(24) அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான்.
(25) நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
(26) சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.
பவுலும் சீலாவும் எங்கே இருந்தார்கள்?
அவர்கள் சிறைச்சாலையில் என்ன செய்தார்கள்?
பவுலுக்கும் சீலாவுக்கும் எப்படிப்பட்ட அணுகுமுறை (அல்லது) மனப்பான்மை இருந்தது?
பவுலும் சீலாவும் தேவனைத் துதித்ததால் நடந்தது என்ன?
சிறைச்சாலைக்காரருக்கும் அவர் குடும்பத்திற்கும் என்ன நேர்ந்தது?
ஆற்றல்மிக்க அணுகுமுறை
(1) பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
(2) மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
(3) கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.
(4) அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.
நாம் எப்படி வாழ வேண்டும்? ஏன்?
இப்படிப்பட்ட நல்ல அணுகுமுறையை கையாள்வதால், எவ்வாறு நமது சூழலை மாற்றிக் கொள்ள முடியும்?
தாக்கத்தை ஏற்ப்படுத்தும் அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும்
(1) என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
(2) என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
(3) அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,
(4) உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
(5) நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.
எதைக் குறித்து நன்றி உணர்வோடு உள்ளீர்கள்?
இது எவ்வாறு உங்கள் அணுகுமுறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
(25) நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
(26) சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.
தேவனைத் துதிப்பதால் எவ்வாறு ஒரு சூழலை மாற்ற முடியும்?
எப்போதும் துதியில் மூழ்கி இருப்பதால், உங்கள் சூழலில் நிகழும் மாற்றங்கள் என்ன?
நண்பரிடம் கேள்
நீங்கள் சவால் நிறந்த, கடினமான சூழலில் உள்ளீர்களா?
இச்சூழ்நிலையை மாற்ற நீங்கள் என்ன செய்ய முடியும்?
வாழ்க்கை நடைமுறை
இந்த வாரத்தில், உங்கள் நல் அணுகுமுறையை பயன்படுத்தி, எந்த சூழலை நல்ல முறையில் மாற்ற முடியும் என சிந்தியுங்கள்! நன்றி உணர்வோடும், துதியோடும் அந்த சூழ்நிலையை கடந்து செல்லுங்கள். பிறகு, அதை குறித்த வேத குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு, உங்கள் குழுத் தலைவரிடம் கலந்து ஆலோசியுங்கள். எது நன்றாக நடந்து முடிந்தது? எது சவாலாக இருந்தது? அடுத்த முறை எவ்வாறு சிறப்பாக கையாளலாம்?
மாதிரி ஜெபம்
ஆண்டவரே, உமது அன்பிற்காகவும், மன்னிப்பிற்காகவும் நன்றி. சவாலான சூழ்நிலை வரும்போது, நன்றி உணர்வோடு இருக்கவும், உம்மை துதிக்கவும் எனக்கு உதவும்.
வசனம்
பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம். அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள். கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.