வாழ்கையில் எப்போதும் நாம் முக்கிய முடிவுகளை எடுக்கிறோம். நாம் சரியாக எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும்,
தேவன் நமக்கென தயாரித்து வைத்துள்ள திட்டத்தை அடைய உதவும். இதைச் செய்ய நமக்கு நல்ல அணுகுமுறையும், மனப்பான்மையும் வேண்டும்.
நன்மனப்பான்மை என்றால் என்ன?
(4) அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.
(5) கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
நாம் யாரை போல் இருக்க வேண்டும்? எந்த மாதிரியான மனப்பான்மை நமக்கு இருக்க வேண்டும்?
எஸ்தர் 2:7
(7) அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் செளந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்.
எஸ்தர் 4:14
(14) நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.
எஸ்தர் 4:16
(16) நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.
எஸ்தருடைய பின்புலம் எப்படி பட்டது?
எப்படி பட்ட முடிவை எஸ்தர் எடுக்க வேண்டியதாய் இருந்தது?
அந்த முடிவு அவருடைய திட்டத்திற்கும், அவர் குடும்பத்திற்கும் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்?
சரியான முடிவை எடுக்க, எஸ்தர் எப்படி பட்ட செயலை செய்யத் துணிந்தார்?
எவ்வாறு அவருடைய நன்மனப்பான்மை, முக்கியமான முடிவெடுத்தலில் உதவிற்று?
நன்மனப்பான்மையை தேர்ந்து கொள்ளுங்கள்
(22) அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
(23) உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
(24) மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
எது புதிதாக்க பட வேண்டும்?
அதை எப்படி செய்ய முடியும்?
(12) தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
(13) அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
எதைக் கொண்டு நம் மனப்பான்மையை சோதித்து பார்க்கலாம்?
நண்பரிடம் கேள்
நீங்கள் நன் மனசாட்சியுடன் வாழ்கிறீர்களா?
நீங்கள் எப்போதாவது கடினமான சூழலில் முக்கிய முடிவுகளை எடுதுள்ளீர்களா? அதைப் பற்றி கூற முடியுமா?
அந்த முடிவை எடுக்கும் போது எப்படி பட்ட மனப்பான்மை உங்களுக்கு இருந்தது?
அந்த முடிவு எப்படி நிறைவேறியது? நல்லதாய் முடிந்ததா?
வாழ்க்கை நடைமுறை
நன் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?
மாதிரி ஜெபம்
இயேசுவே, என் மனப்பான்மையில் உதவுவதற்காக நன்றி. என் எதிர்காலத்திற்கு ஏற்ற நல்ல முடிவுகளை எடுக்கவும், ஆசீர்வாதங்கள் நிறைந்த வாழ்க்கை வாழவும் ஏற்ற மனப்பான்மையை கொண்டிருக்க எனக்கு உதவி செய்யும்.
குறிப்பு வசனம்
உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.