மன உறுதியோடும் ஆற்றலோடும் இருத்தல்

நாம் அடிக்கடி கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வது உண்டு. யோவான் 10:10 முதல் பகுதியில், “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனத்தில் திருடன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது சாத்தானையே. எனினும், நாம் வீழ்த்தப்படுவதில்லை! இவ்வசனத்தின் இறுதியில் “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” என கூறப்பட்டுள்ளது. இயேசுவே இதைக் கூறினார்! நாம் எப்போதும் இயேசுவையே நோக்கி இருந்து, மன உறுதியோடும், நன் மனப்பான்மையோடும் இருக்கும் போது, நாம் இன்னும் அதிக ஆற்றலோடு வளர்கிறோம். நம் வாழ்வும் ஆசீர்வதிக்கப்படும். …

A Courageous Attitude: What It Takes to Get to the Next Level in Life!

Courage is not the absence of fear, but doing things you are afraid to do. As we draw closer to God, we enter into new areas and seasons in our lives. Going to the next level often requires courage. When we try new things with a courageous attitude we are setting ourselves up to be successful on the path toward …

தாராளமாய் வாழ்தல்

லூக்கா 6:38-ல் “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்”, என்று கூறப்பட்டுள்ளது. நாம் தாராளமாய் நமது நேரத்தையும், பணத்தையும், ஆற்றலையும் பயன்படுத்தி மற்றவர்களை ஆசிர்வதிக்கும் போது, நாம் தேவ ஆசிர்வாதத்தின் கதவுகளைத் திறக்கிறோம். தாராள மனப்பான்மை வெறும் உணர்வு அல்ல, அது உள்ளத்தின் வெளிப்பாடு. தேவன் தன் ஒரே மகன் இயேசுவை நமக்காக சாவிற்கு கையளித்த போது, அவர் அதை மனப்பூர்வமாய்ச் …

தேவனை நம்புதல்

தேவனை நம்பி இருப்பது, அவர் நமக்கென வைத்துள்ள சிறப்பான எதிர்காலத்தை நோக்கி நடக்க உதவுகிறது. தேவனை நம்புவதற்கு முன், நாம் அவரின் குணநலன்களையும், அவரில் நமது அடையாளத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். தேவனின் குணம் நாம் தேவனை அறிந்து, தெரிந்து கொண்டால் தான், அவரை நம்ப முடியும். இந்த வசனதிலிருந்து தேவனைப் பற்றி நாம் கற்றுக் கொள்வது என்ன? தேவன் செய்தது என்ன? ஏன் அவர் அவ்வாறு செய்தார்? தேவனின் குனநலன்களைப் பற்றி இவ்வசனம் வெளிப்படுத்துவது என்ன? இயேசு எதற்காக இவ்வுலகத்திற்கு வந்தார்? தேவனில் …

நன்மனப்பான்மையும், முடிவெடுத்தலும்

வாழ்கையில் எப்போதும் நாம் முக்கிய முடிவுகளை எடுக்கிறோம். நாம் சரியாக எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும், தேவன் நமக்கென தயாரித்து வைத்துள்ள திட்டத்தை அடைய உதவும். இதைச் செய்ய நமக்கு நல்ல அணுகுமுறையும், மனப்பான்மையும் வேண்டும். நன்மனப்பான்மை என்றால் என்ன? நாம் யாரை போல் இருக்க வேண்டும்? எந்த மாதிரியான மனப்பான்மை நமக்கு இருக்க வேண்டும்? எஸ்தருடைய பின்புலம் எப்படி பட்டது? எப்படி பட்ட முடிவை எஸ்தர் எடுக்க வேண்டியதாய் இருந்தது? அந்த முடிவு அவருடைய திட்டத்திற்கும், அவர் குடும்பத்திற்கும் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்? …

ஆற்றல்மிக்க அணுகுமுறை

நாம் எங்கு சென்றாலும், அந்த இடத்தில் நல்ல சூழலை உருவாக்கும் ஆற்றல் நமக்கு உண்டு என்பதை நீங்கள் அறிவீர்களா? நல்ல அணுகுமுறையைக் கையாள்வதால், நம்மால் எப்போதும் நல்ல சூழலை உருவாக்க முடியும். ஆற்றல்மிக்க அணுகுமுறையின் எடுத்துக்காட்டு பவுலும் சீலாவும் எங்கே இருந்தார்கள்? அவர்கள் சிறைச்சாலையில் என்ன செய்தார்கள்? பவுலுக்கும் சீலாவுக்கும் எப்படிப்பட்ட அணுகுமுறை (அல்லது) மனப்பான்மை இருந்தது? பவுலும் சீலாவும் தேவனைத் துதித்ததால் நடந்தது என்ன? சிறைச்சாலைக்காரருக்கும் அவர் குடும்பத்திற்கும் என்ன நேர்ந்தது? ஆற்றல்மிக்க அணுகுமுறை நாம் எப்படி வாழ வேண்டும்? ஏன்? இப்படிப்பட்ட …

நன்றி உணர்வின் மனப்பான்மை

“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.” தேவனோடு நாம் கொண்டுள்ள தனிப்பட்ட உறவு, நம்மை நன்றி உணர்வுள்ள வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும். நாம் எவ்வாறு நீதிமான்கள் ஆக்கப்பட்டுள்ளோம்? எதைக் குறித்து நன்றி உணர்வோடு உள்ளீர்கள்? எவ்வாறு நாம் தேவனோடு தனிப்பட்ட உறவில் வாழ முடியும்? நன்றி உணர்வு என்பது நாம் தேர்ந்து கொள்வது ஆலயத்திலும், நாம் செல்லும் மற்ற இடங்களிலும் எவ்வாறு நுழைய வேண்டும்? நமக்கும், நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் இது எத்தகைய மாற்றத்தை உருவாகும்? ஓர் புதிய …

சிறப்பாக முடித்தல் – வெற்றியின் மனப்பான்மை

நாம் எதிலும் சிறப்பாக முடிக்க வேண்டுமென்றால், விடாமுயற்சி எனும் மனப்பான்மை நம் வாழ்வில் இருப்பது அவசியம். நாம் இருக்கும் சூழல் எதுவாய் இருந்தாலும், வெற்றி பெறுவோம் என்ற மனநிலை மிக முக்கியம். நாம் இலக்கை நோக்கியே இருந்தால், சிறப்பாக முடிப்போம் எனும் வெற்றியின் மனநிலை எப்போதும் இருக்கும். வெற்றியின் மனப்பான்மை தேவனுடைய ராஜ்யதிற்கு ஊழியம் புரிய யார் தகுதி உள்ளவர்? வெற்றியின் மனப்பான்மை எவ்வாறு இருக்கும்? சிறப்பாய் முடிப்பதற்கு மூன்று முக்கிய காரியங்கள் அ) தரிசனம் நிறைந்தவர்களாய் இருப்பது நீங்கள் தரிசனம் இல்லாமல் இருக்கும் …

நல் மனப்பான்மையை வழிகாட்டுதல்

சிறையில் அடைபட்டிருந்த யோசேப்பை போல (ஆதியாகமம் 39:20-23), நாமும் பல நேரங்களில் கடினமான சூழலில் உள்ளது உண்டு. நமது துன்ப வேளைகளில் நம் வாழ்க்கையின் திட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்தோமாயின், இச்சவால்கள் நம்மை மென் மேலும் மனச் சோர்வடையச் செய்யும். சவாலான நேரங்களில் தேவனின் திட்டத்தை தெரிந்து கொண்டால், நன் மனப்பான்மையை தக்கவைத்துக் கொள்ளவும், தேவனோடு நெருங்கி வரவும் உதவும். சோதனையில் ஒரு நோக்கமுண்டு இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ள “அந்தகாரம்” மற்றும் “ஒளிப்பிடம்” என்றால் என்ன? இவ்வசனத்தில், பொக்கிஷங்களை பற்றியும் புதையல்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை எதைக் …

தேவன் மீதான நமது அன்பையும் ஆர்வத்தையும் வெளிக்காட்டுதல்

தேவன் நம்மை முதலில் அன்பு செய்ததால், நாம் இப்போது அவரை அன்பு செய்கிறோம். நம்மை மன்னிக்கவும், நமக்கு புது வாழ்வை அளிக்கவும் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார்; இவ்வாறே நம்மீது கொண்ட அன்பை அவர் நமக்கு வெளிப்படுத்தினார். (1 யோவான் 4:16, யோவான் 3:16)   தேவனை துதிப்பதும் ஆராதிப்பதும் நாம் அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடே! இயேசுவைப் பற்றிய உண்மையையும், அவர் நம் வாழ்வில் செய்த காரியங்களை மற்றவருக்கு எடுத்துச் சொல்வதும் கூட அன்பின் வெளிப்பாடு ஆகும். இவையே நமது வாழ்க்கை முறையாக …