#RelationshipGoals

உட்பிரிவு 1 (அ) : பெண்கள் ஆண்களில் எதிர்பார்ப்பது என்ன?



1. தேவனை நேசித்தல், சக மனிதர்களை நேசித்தல், தன்னை நேசித்தல்.
2. மன உறுதி

நீங்கள் வேத குறிப்பு எடுக்கிறீர்கள், ஜெபிக்கிறீர்கள், ஊழியம் செய்கிறீர்கள், உங்கள் வாழ்வில் தரிசனமும், நோக்கமும் உள்ளது.

3. நல்ல தோற்றம்!

நல்ல தோற்றம் என்றால் எதை குறிக்கிறது? கீழே கூறப்பட்டுள்ள வகையில் ஒருவர் தனது வெளித்தோற்றத்தையும் நன்கு பராமரித்து, கவனித்து கொள்கிறார் என்றால் அதுவே நல்ல தோற்றம்.

1) முதல் சந்திப்பு நன்றாக அமையும் வகையில், எப்போதும் நல்ல ஆடைகளையும், காலணிகளையும் அணிதல்.

2) துர்நாற்றம் அடிக்கும் காலணிகளையும், சுருங்கிய ஆடைகளையும் தவிர்த்தல்.

3) தற்கால வழக்கிற்கு ஏற்ப நல்ல தோற்றத்தை கொண்டிருங்கள். நீங்கள் “எவ்வளவு அழகாக இருக்க முடியும்?” என்பதை கற்பனை செய்வது பெரும்பாலான பெண்களுக்கு கடினமாக உள்ளது. ஒரு சில சிறு தகவல்களுக்கு, தற்கால ரசனை கொண்ட ஒருவரைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதிக கட்டங்களும், வடிவங்களும் இல்லாத, ஓரே நிறம் கொண்ட ஆடைகளை அணியுங்கள். வடிவங்களும் கட்டங்களும் கூட சில நேரங்களில் வெற்றிக்கு வழி வகுக்காமல் போகிறது.

4) தினந்தோறும் நீராடியும், தலை முடியை சுத்தமாகவும் வைத்துக்கொள்ளவும். ஒருமுறை ஒரு இளைஞன், “தலை முடியை கவனம் செலுத்தி சுத்தம் செய்யத் தேவையில்லை எனவும், எனவே அவன் அதை செய்வதே இல்லை” எனக் கூறியதைக் கேட்டேன். ஆம், மறக்காமல் நல்ல வாசணை திரவங்களை தினமும் பயன்படுத்துங்கள்.

5) பல் விலக்குதல் வாய் சுத்தம் மிக அவசியம். (இறந்து இரண்டு நாட்களான விலங்கைப் போல நாற்றம் அடிக்காமல் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் தானே?)

4. திட்டத்தை கொண்டிருங்கள்

“எந்த வேலையானலும் அதில் சிறந்து விளங்க, புதிய தொழில் தொடங்க, மேற்படிப்பை தொடர, தேவனையும் சக மனிதர்களையும் சேவிப்பதிலும் வெற்றி சிறக்க, நல்ல திருமண வாழ்க்கைக்கு, உங்கள் நிதியை சரியாக நிர்வகிக்க, தாராள உள்ளதோடு வாழ” என பல்வேறு காரியங்களுக்கு, வாழ்வில் திட்டம் என்பது தேவை. சரியான திட்டத்தை கொண்டுள்ள ஒரு ஆண், தன் வாழ்க்கைக்கான சரியான வழிகளையும் கொண்டுள்ளான். இப்படிப் பட்ட ஆண்களாலேயே பெண்கள் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். உங்கள் கனவுகளுக்கு உருவம் கொடுக்கவும், நீங்கள் எவ்வாறு வாழ வேண்டும் எனவும், யாரோடு வாழ வேண்டும் என்பதிலும் இத்திட்டம் தெளிவாக உதவுகிறது. கிறிஸ்தவ ஆணாகிய நீங்கள் இத்திட்டதை அறிய, தேவனை நோக்கி இருத்தல் வேண்டும். அதுவே நீங்கள் முழுமையான, மன நிறைவுள்ள வாழ்க்கையை வாழச் செய்யும். உங்களுக்கு இப்போது திட்டம் ஏதும் தெளிவாகத் தெரியவில்லை எனில், தேவனுடைய ஊழியத்தை செய்யுங்கள், திட்டம் தானாக வந்து சேரும்.

5. தைரியமாக இருங்கள்!

வளர்ச்சிக்கும் தலமைத்துவதிற்கும் உங்களை அர்ப்பணியுங்கள். தைரியமாக சில முடிவுகளை எடுங்கள். உங்களுக்கு மனதில் பிடித்த பெண்ணிடம் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள். ஒருவேளை நிராகரிக்கப்பட்டால், “எல்லோரும் எல்லோருக்கும் விருப்பமானவர்கள் அல்ல” என்பதை மற்ற ஆண்கள் அறிந்து கொண்டது போல் நீங்களும் தெரிந்து கொள்வீர்கள். மனம் தளராதீர்கள்! ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள், இவ்வளவு பெரிய கடலில் மீன்களுக்கா பஞ்சம்?

கேள்வி

எவ்வாறு உங்களை அதிகம் மேம்படுத்தலாம்?

Study Topics