சுலபமாக பழகக் கூடியவர்கள், நண்பர்களை சம்பாதிக்கிறார்கள். அதற்காக நீங்கள் அதிகமாக பேசக் கூடியவராக இருக்க அவசியமில்லை. சில நேரம் நீங்கள் மற்றவரை அணுகுவது கடினமாக இருந்தாலும், மற்றவர் உங்களை அணுகி வரும்போது, உங்களால் குறைந்தபட்ச நட்போடும் இருக்க முடியும். கண்டிப்பாக, எல்லா நட்பும் காதலாக உருவாகாது. ஆனால் நட்பில் தொடங்கும் போது, அது இன்னும் சிறப்பாக இருக்கும். ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொள்ள நட்புறவு சிறந்த வாய்ப்பாக அமையும். அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்கும். நிறைய நண்பர்களோடு கூடி மகிழும் நேரம், இந்த கட்டம்.
அதையே, வேத வசனமும் கூறுகிறது. பிறகு, பெரிய நட்பு வட்டாரதிலிருந்து, ஒரு குறுகிய நெருங்கிய நண்பர்கள் உருவாகிறார்கள். அதே சமயம், வெளியில் உள்ளோரையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். உங்களைப் பற்றி மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு, எப்போதும் புதிய நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
கேள்வி
உங்கள் நண்பரிடம் பிடித்த மூன்று குணங்களை கூறுங்கள்:
உங்களுக்கு ஒரு சில கேள்விகள்
முதல் கேள்வி
எப்படிப் பட்டவரை நான் நண்பராக கருத வேண்டும்?
முதல் பதில்
பழக இனிமையாக இருப்பதால்,உங்கள் உற்ற நண்பர்களாக யாரை தேர்வு செய்யும் வாய்ப்பு உங்களுக்கு உண்டு. நீங்கள் கூச்ச சுபாவத்தோடு இருந்தால், அடுத்தர்வர்கள் உங்களுக்காக முடிவெடுக்க சுலபமாக அமைந்து விடும். ஆனால், நெருங்கிய நண்பர்களால் உங்களை பலப்படுத்தவும் முடியும், பலவீனப்படுத்தவும் முடியும். எனவே, சரியாக தேர்வு செய்வது அவசியம்.
நம்மைப் போலவே சிந்திக்கின்ற, மனநிலையைக் கொண்ட, ஒரே மாதிரியான ஆர்வத்தைக் கொண்ட ஒருவரோடே நாம் நட்பை வளர்த்துக் கொள்கிறோம். அல்லவா? இவ்வாறு உறவுகளுக்கு நடுவே உள்ள ஒற்றுமை, நம் உறவை பலப்படுத்தும். ஆனால் கடினமான, பொறாமை குணமுள்ள, பழிவாங்குகிற எண்ணமுடையவர், தன் நன்பரிகளிடத்தில் எதிர்மையான தாக்கத்தை ஏற்படுத்துவர்.
ஒரு சிலர் நம்மை ஒதுக்கவும் செய்வார்கள். இது போன்ற சூழலில், தேவனையே உற்ற நண்பராக கருதுவது நலம். அவர் உங்களுக்காக, உங்கள் அருகிலேயே உள்ளார். அப்படியென்றால், நீங்கள் எப்போதும் தனியாக இருப்பது இல்லை. சரியான நேரத்தில், சரியான இடத்தில், நீங்கள் தேர்ந்துகொள்ளும் பொருட்டு, உங்களுக்கு ஏற்ற நண்பர்களை அவர் குறித்து வைத்துள்ளார். எனவே அவசரப் படத் தேவையில்லை.
இரண்டாவது கேள்வி
நாம் வெவ்வேறு நட்பு வட்டாரங்களில் இருந்தாலும், எவ்வாறு மற்ற வெளி நண்பர்களோடு இணையலாம்?
இரண்டாவது பதில்
சிறந்த படைப்பாற்றலோடு இருங்கள்
1. நண்பரின் உதவியோடு, உங்கள் இதயத்திற்கு பிடித்த நபரோடு அறிமுகம் ஆக முயற்சி செய்யுங்கள். உங்கள் இருவருக்கும் பொதுவாக உள்ள ஆர்வங்களை, விருப்பங்களை தெரிந்து கொண்டு அதை பயன்படுத்துங்கள். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு பிடித்த இசை அவருக்கும் பிடிக்கலாம்!
2. இரண்டு குழுக்களும் சேர்ந்து எங்காவது நிகழ்ச்சிக்கோ, வெளியில் செல்லவோ பரிந்துரை செய்யலாம்.
3. அக்குழுவில் உங்கள் மனதிற்கு பிடித்த நபரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி அவரது நண்பர்கள் மற்றும் அவர்கள் பதிவேற்றிய புகைப்படங்கள் ஆகியவற்றை காணுங்கள், அவையெல்லாம் அந்நபரைப் பற்றி ஆயிரம் கதை சொல்லும்.
4. பிரியமானவரின் நண்பர்களைத் தெரிந்து கொள்ளுங்கள். சில நேரங்களில் அவர்களின் உதவி உங்களுக்கு தேவைப் படலாம்.
5. உங்களைப் போலவே கடந்து வந்த சிலரின் ஆலோசனையைக் கேளுங்கள்.
மூன்றாவது கேள்வி
என் மனதிற்கு பிடித்த அந்த நபரிடம் பேச எனக்கு பதற்றமாக உள்ளது. இதைப் போன்ற பதற்றமான உணர்வுகளை எவ்வாறு சமாளிப்பது?
மூன்றாம் பதில்
ஏறக்குறைய எல்லோரும், தைரியமான ஆட்களும் கூட, தங்கள் மனதிற்கு பிடித்தவர்களிடம் பேச முயலும்போது பதற்றம் அடைவது சகஜமே! நாம் பதற்றமாக இருக்கும்போது இரண்டு விதங்களில் வெளிக்காட்டுவோம்.
சிலர் அதிகமாக பேசுவார்கள், மற்றவர் பேசவே மாட்டார்கள்.
நீங்கள் ஒருவேளை அதிகமாக பேசுபவராக இருந்தால்:
உங்கள் பிரியமானவரிடம் “ஏன்”, “எவ்வாறு” போன்ற திறந்த கேள்விகளை கேளுங்கள். இதைக் கேட்பதால், அவர்கள் ஓரிரு வரிகள் அதிகமாக பதில் சொல்லக் கூடும். வெறும் இரண்டு மூன்று கேள்விகளோடு செல்லாதீர்கள்;
எதிரில் உள்ளவர் என்ன கூறுகிறார் என நன்கு கவனியுங்கள். அவர்கள் பேசி முடிக்கும் முன்பே முந்திக்கொண்டு “இதைத் தானே சொல்ல வருகிறீர்கள்?” என மறித்து பேசாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேல், என்ன பேசுவதென்று அறியாத நேரங்களில், உங்கள் மொபைல் போனை பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிருங்கள்.
நீங்கள் அமைதியாக இருப்பவராக இருந்தால்:
அதிகம் படபடப்பு, எதிர்ப்பை குறைத்து, நட்புறவில் மட்டும் இப்போது கவனம் செலுத்தவும். பயத்தை எதிர்கொண்டு, உங்கள் எதிரில் இருபவரோடு பேசுங்கள். அதுவே சிறந்த வழி. அவர்களிடம் கேட்பதற்கு, சில கேள்விகளைக் தயார் செய்து கொள்ளுங்கள். அதே நேரம், அவர்கள் அதே கேள்வியை உங்களிடம் கேட்டால், என்ன கூறுவது என யோசித்து வையுங்கள். ஏனென்றால், நாம் எல்லோருக்குள்ளும் படபடப்பு இருக்கும். மற்றவருக்கு மறு வாய்ப்பளிப்பது சிறந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒருசிலர் படபடப்பினால் அதிகமாக பேசுபவார்கள். வேறு சிலரோ பேசாமேலே இருப்பார்கள். இன்னும் ஒரு சிலர், தனக்கு நடந்த கசப்பான முன் அனுபவத்தின் காரணமாக, நடுக்கதில் இருப்பார்கள். எதிர் பாலினத்தவராலோ, குடும்பத்தினராலோ, முன் காதலராலோ இழிவுபடுத்தப் பட்டிருந்தாலும்; இல்லையேல் எதேனும் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்தாலும் அது கசப்பான முன் அனுபவங்களே! அப்படிப்பட்ட கசப்பான அனுபவங்களுக்கு அடிமைகளாய் இருப்பதை நிறுத்திக் கொள்ள முடியுமா? ஆம் முடியும்! தேவனைத் தேடுங்கள், ஜெபத்தை நாடுங்கள், நல்ல நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது நல்ல மனோதத்துவரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளுங்கள்.
நீங்கள் நட்பு எனும் நிலையில் இருக்கும் போது செய்யக் கூடாதவை.
இந்த பகுதியில் உள்ள “செய்ய கூடாதவை” என கூறிய அனைத்தும் மிக முக்கியமானவை. ஏனென்றால், எந்நேரமும், காயப்படாமல், சங்கடத்திற்கு உள்ளகாமல் எந்த மனக்கசப்பும் இல்லாமல் அந்த உறவிலிருந்து வெளிவர முடியும்.
1. சரியாக பழகாத ஒரு நபரிடம், உங்களுடைய முகவரி மற்றும் தொலைபேசி எண்களை பகிர்ந்து கொள்ளும் போது கவனமாக இருங்கள். அவர்கள் எவராய் இருந்தாலும் சரி.
2. உங்கள் மன தைரியத்தை அலட்சியம் செய்து விட்டு, சிறந்த நபரை நழுவ விட்டுவிடாதீர்கள். ஒருவேளை, இருவரும் ஒரே குழுவைச் சேர்ந்தவராக இருந்தால், இன்னும் அதிக தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
3. சமூக வலைதளங்களில் உரையாடும் போது, அவர்களை நச்சரிக்கதீர்கள். மற்ற எல்லா நண்பர்களிடம் எவ்வாறு சாதாரணமாக பேசுவீர்களோ அப்படியே உங்கள் மனதிற்கு பிடித்தவரிடமும் பேசுங்கள்.
4. திருமண பேச்சை எதிர் பார்க்காதீர்கள். நண்பர்களாக மட்டும் இருங்கள்! அதுவே இப்போதைக்கு சிறந்தது
5. விலை உயர்ந்த பொருட்களை வாங்காதீர்கள்.
6. உடல் ரீதியான தொடர்புகளை தவிர்த்திடுங்கள். ஒரு சில நாடுகளில், கலாச்சாரத்தில் அவ்வாறு உடல் தொடர்புகளைப் பெரிது படுத்துவதில்லை. ஒரு சில நாடுகளில் உடல் தொடர்பு, இருவருக்கும் இடையே உள்ள அர்ப்பணிப்பை குறிப்பதாக கூறப்படுகிறது. உங்கள் கலாச்சாரத்திற்கு எது ஏற்றதோ அதைப் பின்பற்றுவது நல்லது.
7. வலிய பேசாதீர்கள் நீங்கள் ஒருவரோடு, என்றைக்கும் நிலைக்கும் உறவில் இருக்க விரும்பாமல், தற்போதைய தேவைக்கு மட்டும் பேச விரும்பும் போது வலிந்து பேசுவதும், ஆசை வார்த்தைகள் கூறுவதும் உண்டு. அதை செய்யாதீர்கள்.
8. அணுக முடியாத நிலையில் இருக்காதீர்கள். உங்கள் நண்பர்களோடு மட்டுமே எப்போதும் சுற்றி கொண்டிருந்தால், வெளியே இருப்பவர்களால் உங்களை அணுக முடியாது.
9. உறவில் விளையாட்டு வேண்டாம் இவ்வாறு செய்யும் போது, உங்களை யாராலும் தொடர்பு கொள்ள முடியாது. இது ஒருசிலருக்கு சோர்வை ஏற்படுத்தி, திரும்பி வராமலே போகலாம்.
10. நீங்கள் விரும்பும் நபரைக் குறித்து கண்டிப்பான பட்டியல் வேண்டாம். மாறாக, கனிவு மனப்பான்மை, கடின உழைப்பு போன்ற ஒரு சில குணநல பட்டியல் நல்லது. நல்ல தோற்றம், வயது, வேலை, சம்பளம் என அடிக்கிகொண்டே போகிறவர்களால் அப்படிப் பட்ட நபரைக் கண்டு கொள்வது மிகக் கடினம். வாழ்க்கையில் எல்லாமும் நிறைந்து இருக்க வேண்டும். வேறுபாடுகளை புரிந்து கொள்ள தயார் ஆகலாமே?
பயனுள்ள குறு தகவல்கள்.
1. எதார்த்தமாக உரையாட வாய்ப்புகளை தேடி பயன்படுத்துங்கள்.
2. இது வெறும் நட்பு மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவே எல்லோரையும் சரி சமமாக நடத்துங்கள்.
3. நட்பு வட்டத்தில் இருக்கும் போது, அவர்கள் அலைபேசியில், காதலை குறிக்கும் வகையிலும் முத்தத்தை குறிக்கும் வகையிலும் எதையும் அனுப்பாதீர்கள். எந்த வித மோக அழுத்தங்களும் இல்லாமல், நட்பை மட்டும் கட்டி எழுப்புங்கள்.
4. நீங்கள் தூரத்தில் இருந்து வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது. ஒரு கல்லும் நகராது! அவர்கள் உலகத்தில் ஒரு இடத்தை பிடிக்க பொறுமையாக ஒரு சில நகர்வுகளை செய்யுங்கள். ஆக்ரோசமாக அணுகாதீர்கள். பொறுமையாக கையாளுங்கள். சில நேரங்களில், தற்ச்செயலாக நடப்பவை எல்லாம் நல்ல பலனைத் தரும். அதுவே சிறந்ததும் கூட.
5. நீங்கள் மிகவும் முயற்சித்து, உங்களை வருத்திக் கொண்டு ஒருவரோடு பழக முயற்சிக்கும் போது, அவர்கள் உங்களை நிராகரிக்கவும் வாய்ப்பு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். காதல் வாய்ப்பை நீங்கள் தவர விட்டாலும், நட்பை சம்பாதித்து உள்ளீர்கள். நட்பையும், அதை அடையும் முன் பெறும் அனுபவங்களும் ஒரு வகையில் நல்லதே! எவ்வாறு ஒரு நல்ல நண்பராக இருக்கலாம் என கற்றுக் கொண்டே இருங்கள். “பரவாயில்லை போகட்டும்” என விட்டு கொடுத்தலும் நல்ல நட்பின் ஒரு பகுதி என்பதை நினைவில் கொள்ளுங்கள்,