தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும் என சங்கீதம் 51:10 கூறுகிறது இயேசுவைப் பின் தொடரும் நாம், தேவனைப் பற்றியும் சக மனிதர்களைக் குறித்தும் சுத்தமுள்ள இதயத்தைக் கொண்டு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். சுத்தமுள்ள இதயம், நம்மை தேவ சித்தத்தின் படி வாழச் செய்யும்; நல் உறவுகளைக் கட்டியெழுப்பும்.
சுத்தமுள்ள இதயத்தின் பரிசோதனை
நம் இதயத்தில் உள்ள “பொல்லாத” காரியங்களை எவ்வாறு கண்டுகொள்வது?
ஏன் மனக்கசப்பை கொண்டிருப்பது தவறு?
எவ்வாறு நாம் சுதமுள்ள இதயத்தைக் கொண்டிருப்பது?
வேதம் எழுதப்பட்ட காலங்களில், சூரியன் மறையும் நேரத்தில் மக்களும் தங்கள் படுக்கைக்கு சென்றுவிடுவார்கள்.
இக்காலத்தில், ஒருவரை மன்னிக்க எது சிறந்த நேரம்?
நம் வாழ்வில், எது சாத்தானுக்கு இடம் கொடுக்கிறது?
சாத்தானுக்கு இடம் தராமல் எவ்வாறு நம் இதயத்தை காத்துக்கொள்வது?
எதிலிருந்து நம் இதயத்தை “காத்துக்கொள்ள” வேண்டும்?
எப்போதாதவது மன்னிக்க முடியாமை, மன கசப்பு, கோபம் ஆகியவற்றை இதயத்தில் அனுமதித்தது உண்டா?
நண்பரிடம் கேள்
- உங்கள் இதயத்தை சோதித்து அறிய தேவனை அனுமதித்ததுண்டா?
- உங்கள் இதயத்தில் உள்ள காரியங்களை, எவ்வாறு தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துகிறார்?
- அது எவ்வாறு உங்களுக்கு உதவிற்று?
வாழ்க்கை நடைமுறை
- எத்தனை முறை உங்கள் இதயத்தை பரிசோதித்து அறிகிறீர்கள்?
- ஒவ்வொரு மாலை வேளையிலும் நேரத்தை ஒதுக்கி ஜெபியுங்கள், மற்றவர்களை மன்னியுங்கள், உங்களை மன்னிக்க தேவனிடம் மன்றாடுங்கள்.
மாதிரி ஜெபம்
இயேசுவே, நீர் என்னை மன்னித்து, சுத்தமுள்ள இதயத்தை தந்ததற்காக நன்றி. தினந்தோரும் நீர் என்னை மன்னிப்பது போல நானும் மற்றவர்களை மன்னிக்க எனக்கு உதவும்.