சிறையில் அடைபட்டிருந்த யோசேப்பை போல (ஆதியாகமம் 39:20-23), நாமும் பல நேரங்களில் கடினமான சூழலில் உள்ளது உண்டு. நமது துன்ப வேளைகளில் நம் வாழ்க்கையின் திட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்தோமாயின், இச்சவால்கள் நம்மை மென் மேலும் மனச் சோர்வடையச் செய்யும். சவாலான நேரங்களில் தேவனின் திட்டத்தை தெரிந்து கொண்டால், நன் மனப்பான்மையை தக்கவைத்துக் கொள்ளவும், தேவனோடு நெருங்கி வரவும் உதவும்.
(20) யோசேப்பின் எஜமான் அவனைப்பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்.
(21) கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.
(22) சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான்.
(23) கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.
சோதனையில் ஒரு நோக்கமுண்டு
(3-4) உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்..
இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ள “அந்தகாரம்” மற்றும் “ஒளிப்பிடம்” என்றால் என்ன?
இவ்வசனத்தில், பொக்கிஷங்களை பற்றியும் புதையல்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை எதைக் குறிக்கிறது?
நன் மனப்பான்மையை கொண்டிருத்தல்
(20) யோசேப்பின் எஜமான் அவனைப்பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்.
(21) கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.
(22) சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான்.
(23) கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.
யோசேப்பு எங்கே இருந்தார்?
சிறையிலிருந்த யோசேப்பின் நன் மனப்பான்மை, எவ்வாறு தேவனின் தயையயும், சிறையிலிருந்த மற்றவர்களின் தயையயும் பெற உதவிற்று?
(16) எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
(17) இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
(18) எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
அனுதினமும் நாம் எவ்வாறு வாழ வேண்டும்?
சிறந்தது வரப் போகிறது
(41) பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி,
(42) பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து,
(43) தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்;
யோசேப்பு எந்த நிலைக்கு உயர்ந்தார்?
(28) அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
உங்களது சவாலான சூழ்நிலைகளில் தேவன் என்ன செய்யவார்?
நண்பரிடம் கேள்
உங்களது சோதனைக் காலங்களில் ஏதேனும் “பொக்கிஷத்தை” கண்டு கொண்டீர்களா? அதைப் பற்றி கூற முடியுமா?
இதைப் போல் சோதனைக் காலங்களில் உங்களது மனப்பான்மை எவ்வாறு இருந்தது?
அதன் முடிவு எப்படி இருந்தது?
வாழ்க்கை நடைமுறை
இதைப் போல் சவாலான சூழ்நிலை அடுத்த முறை வரும் போது என்ன செய்வீர்கள்?
மாதிரி ஜெபம்
அப்பா,நீர் என்னோடு எப்போதும் இருப்பதற்காக நன்றி. நீர் என் வாழ்வின் பொறுப்பாளர் என அறிவேன். எனவே, நல்ல மனப்பான்மையும் அணுகுமுறையும் கொள்ள எனக்கு உதவும்.
வசனம்
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.