தேவன் நம்மை முதலில் அன்பு செய்ததால், நாம் இப்போது அவரை அன்பு செய்கிறோம்.
நம்மை மன்னிக்கவும், நமக்கு புது வாழ்வை அளிக்கவும் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார்; இவ்வாறே நம்மீது கொண்ட அன்பை அவர் நமக்கு வெளிப்படுத்தினார். (1 யோவான் 4:16, யோவான் 3:16)
1 யோவான் 4:16
(16) தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
யோவான் 3:16
(16) தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
தேவனை துதிப்பதும் ஆராதிப்பதும் நாம் அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடே! இயேசுவைப் பற்றிய உண்மையையும், அவர் நம் வாழ்வில் செய்த காரியங்களை மற்றவருக்கு எடுத்துச் சொல்வதும் கூட அன்பின் வெளிப்பாடு ஆகும். இவையே நமது வாழ்க்கை முறையாக மாற வேண்டும்.
எடுத்து சொல்லுதல்
(8) அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.
(9) அவன் நடக்கிறதையும், தேவனைத்துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு:
(10) தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள நபர் நலமடைந்த பின் என்ன செய்தார்?
எப்படிப்பட்ட அபிப்ராயத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்தினார்?
(16) கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.
இயேசுவின் நற்செய்தியைக் குறித்து நமக்கு எந்த மாதிரியான மனநிலை இருக்க வேண்டும்?
வேத வார்த்தை என்ன செய்யும்?
ஆராதனை மற்றும் துதி
பின்வரும் வசனத்தை வாசித்து பதிலளியுங்கள். நாம் ஏன் ஆராதிக்கிறோம்? எவ்வாறு நாம் ஆராதிக்க வேண்டும்?
(2) மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
(12) உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன்..
(1) நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும்.
(2) உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்; உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
ஆர்வம் மிகுந்த வாழ்க்கை முறை
அ) முழு உடலோடு ஆராதிப்பது
பின்வரும் வசனத்தை வாசித்து பதிலளியுங்கள். நாம் எவ்வாறு முழு உடலோடு ஆராதிப்பது?
(2) உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
(10)
So Joshua fought the Amalekites as Moses had ordered, and Moses, Aaron and Hur went to the top of the hill.
(10) யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம்பண்ணினான். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள். மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.
(12) மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.
(13) யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறியடித்தான்.
(8) அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.
(30) கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்.
ஆ) தேவனுக்கு கீழ்ப்படிதல்
(18) அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
(19) ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.
(20) இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.
இயேசுவின் சீடர்களாகிய நாம் என்ன செய்ய அழைக்கப் பட்டுள்ளோம்?
இன்றைய வாழ்வில், இதை எவ்வாறு செய்வது?
(1) அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
(2) நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
நாம் எப்படி வாழ வேண்டும்?
நண்பரிடம் கேள்
எவ்வாறு நீங்கள் துதி, ஆராதனையையும், நற்செய்தியை எடுத்துச் சொல்லுவதையும் வாழ்வின் அங்கமாகக் கொண்டுள்ளீர்கள்?
வாழ்க்கை நடைமுறை
இயேசுவின் வாழ்க்கை மற்றும் அவரைப் பற்றிய உண்மையை, உங்களால் இந்த வாரம் யாருக்கு எடுத்துச் சொல்ல முடியும்?
அந்த நபரை சந்திந்து, உங்கள் வாழ்வில் தேவன் செய்யும் நற்செயல்களை எடுத்து சொல்ல நேரத்தை ஒதுக்குங்கள்.
மாதிரி ஜெபம்
அப்பா, நீர் எப்போதும் நல்லவர்; எங்களுடைய துதிக்கும் ஆராதனைக்கும் தகுதியானவர். உம்மைப் பற்றிய உண்மையை மற்றவருக்கு எடுத்துச் சொல்லும் வகையில், என்னை பல்வேறு இடங்களில் வைத்துள்ளீர், நன்றி.
வசனம்
கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.