இவ்வுலகில், எவ்வாறு எல்லாமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாய் உள்ளதோ அதே போல, நாமும் தேவனும் தொடர்புடையவர்கள். இதை ஒரு சில வேத கோட்பாடுகள் நமக்கு எடுத்துக் கூறுகிறது.
தேவன் உங்களை அன்பு செய்து, உங்களுடைய வாழ்க்கைக்கென சிறந்த திட்டத்தை வைத்துள்ளார்.
தேவனின் அன்பு –
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
எவ்வாறு தேவன் தம் அன்பை நமக்கு வெளிக்காட்டினார்?
தேவனின் திட்டம் –
திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
இயேசு, நமக்கு எதை கொடுக்க வந்தார்?
நாம் பாவிகளாய் இருந்து, தேவனை விட்டு பிரிந்து இருப்பதால், அவர் அன்பையும், வாழ்வின் திட்டத்தையும் நம்மால் அறியவோ, அனுபவிக்கவோ முடியாமல் போகிறது!

நாம் பாவிகளாக இருக்கிறோம். –
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி..
பாவம் என்றால் என்ன?
நாம் பிரிக்கப்பட்டுள்ளோம் –
ரோமர் 6:23
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
2 தெசலோனிக்கேயர் 1:8-9
கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜூவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும்..
எப்படி, ஏன் நாம் தேவனிடம் இருந்து பிரிக்கப்பட்டோம்?
நமக்கும் தேவனுக்கும் நடுவே ஏற்பட்ட பிளவை நிரப்ப நாம் செய்யும் முயற்சிகள் என்னென்ன?
இயேசுவே நமது பாவத்திற்கு பரிகாரி. அவர் வழியாகவே நாம் தேவனின் அன்பையும், அவர் நமக்கு வைத்துள்ள திட்டத்தையும் அறிந்து, அனுபவிக்கிறோம்.

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
இயேசு நமக்காக என்ன செய்தார்?
நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,
அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து,
கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.
இயேசு இறந்த பின் என்ன நிகழ்ந்தது?
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
எவ்வாறு நாம் பரலோக பிதாவோடு இணைவது?
இயேசுவை மீட்பராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நம்மால் தேவனின் அன்பையும், அவர் நமக்காக வைத்துள்ள சிறந்த திட்டத்தையும் அறிந்து, அனுபவிக்க முடியும்.
நண்பரிடம் கேள்
எப்போதிலிருந்து இயேசுவை நம்புகிறீர்கள்? ஏன்?
அவர் உங்கள் வாழ்வை எப்படி மாற்றினார்?
வாழ்க்கை நடைமுறை
கிறிஸ்துவை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்!
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
நம்பிக்கையின் வழியாக கிறிஸ்துவை நாம் பெற்றுக் கொள்கிறோம்.
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு.
ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.
நாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது, புது பிறப்படைகிறோம்
யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து அதிசயப்படவேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
இந்த முடிவுகள் எல்லாமும் நமது தனிப் பட்ட முடிவுகளே!
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
இது வரை இயேசுவை உங்கள் வாழ்வில் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், இனிமேல் ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?
மாதிரி ஜெபம்
இயேசுவே, என்னை அன்பு செய்து, என் பாவங்களின் தண்டனையை நீர் ஏற்றுக் கொண்டதற்காக நன்றி! தயை கூர்ந்து என் பாவங்களை மன்னியும், என் உள்ளத்தினில் வாரும். நன்றி, இயேசுவே!
வசனம்
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்”.