தகுதி இல்லாத நம்மேல் தேவனின் கனிவு
தகுதி இல்லாத ஒருவர், ஆற்றல் மிகுந்த ஒருவரிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் கனிவே கிருபை (இரக்கம்) ஆகும். கொலை செய்யப்பட இருந்த பெண் குற்றவாளியைக் காப்பாற்றி, இயேசு விடுவித்ததிலிருந்து தேவனின் கிருபையைப் புரிந்து கொள்ளலாம். தேவன் தன் கிருபையை, இயேசு வழியாக நமக்கு வாரி வழங்கினார்.
பெண்ணுக்கு கிடைத்த இயேசுவின் கிருபை
(3) அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
(4) போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
(5) இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
முறைப்படி அந்த பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை என்ன?
(6) அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள் இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
(7) அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்துபார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
(8) அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
(9) அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள்.
இயேசு எவ்வாறு அந்த பெண்ணைக் காப்பாற்றினார்?
(10) இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையும் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
(11) அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
இயேசு அந்த பெண்ணை குற்றம் சுமத்தினாரா அல்லது தண்டித்தாரா? என்ன செய்தார்?
இயேசு நமக்காக வழக்காடுகிறார்
ரோமர் 3:23
(23) எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
ரோமர் 6:23
(23) பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
நாம் செய்த தவறு என்ன? எத்ததைய தண்டனை பெற தகுதியானோம்?
(8) நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
எவ்வழியில்/ எந்த நிலையில் தேவன் தமது பேரன்பை நமக்கு வெளிக்கட்டினார்?
(13) உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;
(14) நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
(15) துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
நமது பாவத்தை இயேசு என்ன செய்தார்?
(14) வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.
(15) நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
(16) ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
எது இயேசுவை நமக்கு இவ்வளவு பெரிய மத்தியஸ்தர் ஆக்குகிறது?
நாம் கிருபையினால் மீட்கப்பட்டோம்
(22) அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.
(23) எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
(24) இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
(25) தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும்,
(26) கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.
தேவன் நம்மை எப்படி எவ்வாறு கொண்டார்?
(1) ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
(2) கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
இயேசுவின் வெற்றி நமக்கு எதை உணர்த்துகிறது?
“இனி பாவம் செய்யாதே” என இயேசு அப்பெண்ணிடம் கூறினார்.
(11) அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
(8) மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.
தேவனின் கிருபையைப் பெற்றுக்கொண்ட பின் நாம் எவ்வாறு வாழ வேண்டும்?
நண்பரிடம் கேள்
- தேவன் தம் கிருபையை எவ்வாறு உங்களுக்கு வெளிக்கட்டினார் என கூற முடியுமா?
- கிருபையை குறித்து வேறு எதேனும் கேள்வி உள்ளதா?
வாழ்க்கை நடைமுறை
- எவ்வகையில், நாமும் இப்பெண்ணைப் போல இருக்கிறோம்?
- நாம் எவ்வாறு தேவனின் அன்பை பெற்றுக்கொள்வது?
- எவ்வாறு தேவனின் கிருபை நம் வாழ்வை மாற்றுகிறது?
மாதிரி ஜெபம்
இயேசுவே, உமது கிருபைக்காக நன்றி. என் பாவத்தின் தண்டனையிலிருந்து என்னை மீட்டீரே, நன்றி! உமது இரக்கம், மன்னிப்பு, நிறை வாழ்வு விடுதலையை பெற்றுக் கொள்கிறேன்!
வசனம்
“எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்”