நம் உதவியாளரும், உந்து சக்தியானவரும்
இயேசு பிரலோகதிற்குச் செல்லும் முன், “ஆவியானவர் வந்து அவர்களுக்கு துணையாக இருப்பார்” என தன் சீடர்களிடம் கூறினார். பிதாவும், இயேசுவையும் போல பரிசுத்த ஆவியானவரும் தேவன் தான்.நாம் ஆவியானவரோடு தனிப்பட்ட முறையில் உறவாட முடியும். தேவனைப் பற்றி அறிந்து கொள்ள, ஏற்கனவே உங்களுக்கு அவர் உதவியுள்ளார்.
பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார்
எவ்வாறு உதவி செய்கிறார்?
(26) என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
(8) அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
(13) சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
பரிசுத்த ஆவியானவர் நமக்கு வாழ்வளிக்கிறார்
எவ்வாறு நமது வாழ்வை மாற்றுகிறார்?
(5) இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
(6) மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.
(7) நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து அதிசயப்படவேண்டாம்.
(8) காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
(2) கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
(22) ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்.
(23) சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
(24) கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
(25) நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்.
பரிசுத்த ஆவியானவர் நமக்கு உந்து சக்தியாக உள்ளார்
எவ்வழிகளில் நமக்கு உந்து சக்தியாக உள்ளார்?
(11) மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
(4) அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
(4) வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
(5) ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.
(6) கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.
(7) ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.
(8) எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
(9) வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும்,
(10) வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
(11) இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.
(8) பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
நாம் எதைச் செய்ய பரிசுத்த ஆவியானவர் நமக்கு உந்து சக்தியாக உள்ளார்?
பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்கிறார்
ஆவியானவர் நமக்குள் இருப்பாரென இயேசு வாக்களித்து உள்ளார் (யோவான் 14:17).
(17) உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
நமது உடல் பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆலயம் (1 கொரிந்தியர் 6:19), இவ்வழியாக, தேவன் நம்மை தன் பிள்ளைகள் என உறுதியளிக்கிறார் (2 கொரிந்தியர் 1:22).
(19) உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
(22) அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்.
நண்பரிடம் கேள்
- எவ்வாறு உங்களுக்கு ஆவியானவர் உதவி செய்து, உந்து சக்தியாக இருக்கிறார்?
- பரிசுத்த ஆவியானவர் குறித்து வேறு எதேனும் கேள்வி உள்ளதா?
- எவ்வாறு உங்கள் வாழ்வில் ஆவியானவர் உதவி செய்கிறார்?
வாழ்க்கை நடைமுறை
இயேசு தன் சீடர்களுக்கு என்ன கூறினார் என யோவான் 20:22 -ல் காணலாம்
(22) அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நம் வாழ்வில் எவ்வாறு திறந்த மனதோடு ஆவியானவரை ஏற்றுக் கொள்வது?
மாதிரி ஜெபம்
ஆவியானவரே, நீர் என்னோடு, எனக்குள் இருப்பதற்காக நன்றி! என்னை ஆற்றி தேற்றி உண்மையான வழியில் என்னை நடத்துகிறீர். உமது ஆற்றலால் என்னை நிரப்பும்.
வசனம்
“பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.”