தினந்தோறும் வேதத்தை வாசிப்பதினாலும், சிந்திப்பதினாலும், நாம் ஆற்றலோடு வளரவும், தேவனோடு நெருங்கி வரவும் முடியும். நீங்கள் வேத வாசிப்பை பழக்கிக் கொள்ளவும், வாசிப்பதை வாழ்வில் நடைமுறை படுத்தவும் கீழுள்ள எடுத்துக்காட்டு உதவும்.
எதை வாசிக்கலாம் என்ற யோசனைக்கு, ஒரு “வேத வாசிப்பு திட்டம்” மிக உதவியாக இருக்கும். இதுவரை தேவன் உங்களோடு என்ன பேசி வருகிறார் என திரும்பி பாருங்கள். அதை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
வேத குறிப்பு – மாதிரி
1. தேதியை குறித்து கொள்ளுங்கள்.
2. ஒரு தலைப்பு ஒன்றை யோசித்து வைத்து கொள்ளுங்கள். (பின்னர் எழுதிக் கொள்ளலாம்).
3. அன்று வாசித்த வசனத்தை குறித்து கொள்ளுங்கள்.
4. வசனதிலிருந்து உங்களுக்கு தோன்றிய சிந்தனைகளை எழுதுங்கள்.
5. ஒரு வரியில் எளிய ஜெபம் ஒன்றை எழுதிக் கொள்ளுங்கள்.
6. இப்போது தலைப்பை எழுதுங்கள்.
சில வாரங்கள் கடந்த பின்னர், உங்கள் வாழ்வில் தேவன் பேசிய விதத்தைக் கண்டு கொள்வீர்கள்.
வேத குறிப்பு – எடுத்துக்காட்டு
22 ஜனவரி
மத்தேயு 13:1-24
• தேவன் விதைக்கிறவர். அவருடைய வார்த்தையாகிய விதையை அவர் விதைக்கிறார்.
• விழுகிற நிலத்தை பொறுத்தே அவ்விதை முளைத்து நல்ல பலன் தரும்.
• தேவனுடைய உண்மையே அவ்விதை!
• நல்ல நிலத்தில் விழுந்த விதை முப்பது, அறுபது, நூறு மடங்காக பலனைத் தந்தது.
குறிப்பு – தேவ வார்த்தையை ஏற்றுக் கொள்ளும் விதமாக, நான் என்னுடைய இதயத்தை தயார் செய்ய வேண்டும்.
ஜெபம் – ஆண்டவரே, உம்முடைய வார்த்தையை கேட்கும் பொருட்டு நான் என் இதயத்தை தயார் செய்கிறேன்.
* * *