வாழ்வின் அடித்தளம்

“கன்மலை மேல் கட்டுதல்”

நம் வாழ்விற்கு உதவும் அரிய காரியங்களை இயேசு வேதத்தில் கூறியுள்ளார். இக்கதையிலிருந்து, நம் வாழ்வை உறுதியான அடித்தலத்தின் மீது அமைப்பதின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறார்.

வாழ்வைக் கட்டி எழுப்புதல்

இக்கதையில் கூறப்பட்டுள்ள “வீடு” எதைக் குறிக்கிறது?

இக்கதையில், புத்தியுள்ள மனிதனுக்கும் புத்தியில்லாத மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

வாழ்வின் அடித்தளம்

நமது வாழ்க்கையில் உறுதியான அடித்தளம் இருப்பது நல்லது என ஏன் நினைக்கிறீர்கள்?

இப்போது வரை எதன் மேல் நமது வாழ்வைக் கட்டுகிறோம்? (எ.கா.: உறவுகள், கல்வி)

வாழ்வின் “பெரு வெள்ளங்கள்”

பெரு வெள்ளமும், பெரு மழையும் நமது வாழ்வில் நம்மை நெருக்கும் சோதனைகளைக் குறிக்கிறது. நம் வாழ்வில் நாம் சந்திக்கும் சோதனைகள் என்னென்ன?

எவ்வாறு பெரு வெள்ளம் நமது “வீட்டை” அழிக்கிறது?

நண்பரிடம் கேள்

உங்களது வாழ்க்கையின் அடித்தளம் எது?

சோதனைகளின் போது உங்களது அடித்தளம் உறுதியாக இருந்ததா?

வாழ்க்கை நடைமுறை

உங்கள் வாழ்வின் அடித்தளத்தை எவ்வாறு உறுதியாக்கலாம்?

உங்கள் வாழ்வின் எந்த பகுதியில் நீங்கள் இன்னும் தேவனைச் சார்ந்து இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்?

மாதிரி ஜெபம்

இயேசுவே, ஞானமுடன் என் வாழ்வில் முக்கிய முடிவுகளை எடுக்க எனக்கு உதவும். தளர்ந்துள்ள அடித்தளத்தை எனக்கு காட்டும். உம்மை நம்புகிறேன், எனவே அதை வலுப்படுத்தும்.

வசனம்