(38) கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.
லூக்கா 6:38-ல் “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்”, என்று கூறப்பட்டுள்ளது. நாம் தாராளமாய் நமது நேரத்தையும், பணத்தையும், ஆற்றலையும் பயன்படுத்தி மற்றவர்களை ஆசிர்வதிக்கும் போது, நாம் தேவ ஆசிர்வாதத்தின் கதவுகளைத் திறக்கிறோம். தாராள மனப்பான்மை வெறும் உணர்வு அல்ல, அது உள்ளத்தின் வெளிப்பாடு. தேவன் தன் ஒரே மகன் இயேசுவை நமக்காக சாவிற்கு கையளித்த போது, அவர் அதை மனப்பூர்வமாய்ச் செய்தார். கொடுப்பது என்பது மனப்பான்மை மட்டுமல்ல, அது வாழ்க்கை முறையும் கூட.
கொடுப்பது அன்பின் வெளிப்பாடு
யோவான் 3:16
(16) தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
தீத்து 3:4-7
நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது,
(5) நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
(6) தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக,
(7) அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.
எவ்வாறு தேவன் தமது தாராள குணத்தை நமக்குக் காட்டினார்?
(4) அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.
(5) கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
(6) அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
(7) தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
(8) அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
இயேசுவின் மனப்பான்மை எவ்வாறு இருந்தது?
நாமும், கொடுக்கும்பொழுது எப்படிப் பட்ட மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும்?
தாராளமாய் வாழ்வதின் ஆசீர்வாதங்கள்
2 கொரிந்தியர் 9:10
(10) விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.
உபாகமம் 15:10
(10) அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
தாராளமாய் வாழ்தலின் பயன் என்ன?
தேவன் நமக்களித்த ஆசீர்வாதத்திலிருந்து எவ்வாறு நாம் தாராளமாய் வாழ்வது?
எதிலும் தாராளமாய் இருத்தல்
நீதிமொழிகள் 11:25
(25) உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
2 கொரிந்தியர் 9:11
(11) தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதாரகுணத்திலே நீங்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள்.
தாராளமாய் வாழ்தலின் பயன் என்ன?
நண்பரிடம் கேள்
நீங்கள் தாராள மனதோடு இருக்க உந்து சக்தியாக இருப்பது எது?
தாராளமாய் இருப்பதை உண்மையிலேயே மகிழ்ந்து, விரும்புகிறீர்களா?
ஆம் என்றால், ஏன்? இல்லை என்றால், ஏன் இல்லை?
உங்கள் தாராள குணத்தையோ அல்லது யாரேனும் அவர்களுடைய தாராள மணப்பான்மையின் பொருட்டு உங்களை ஆசீர்வதித்திருந்தால் அந்த சாட்சியை இப்பொழுது பகிர்ந்து கொள்ளலாம்.
வாழ்க்கை நடைமுறை
எவ்வாறு தாராளமான வாழ்க்கை முறையை வளர்த்துக் கொள்வது?
ஒருவேளை, தாராள குறைச்சலின் காரணத்தால், உங்கள் வாழ்வில் ஆசீர்வாதத்தை குறைத்துக் கொள்வதாக உணர்கிறீர்களா? அப்படியென்றால் அது என்ன?
மாதிரி ஜெபம்
அப்பா, உமது ஒரே மகனை எனக்காக தந்ததற்காக நன்றி. பணத்தையும், நேரத்தையும், ஆற்றலையும் தாராளமாய் செலவு செய்ய எனக்கு கற்றுத் தரும்.
குறிப்பு வசனம்
“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.”