இச்சை அடக்கம்

பாலியல் உறவு என்பது மிக ஆற்றல் வாய்ந்தது, எனவே தேவன் பாலியல் பாலியல் ஒழுக்கக் கேடைக் குறித்து எச்சரிக்கிறார்.

 

புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க மொழியில் இந்த பாலியல் ஒழுக்க கேட்டை “போர்நியோஸ்” (Porneos) என்ற சொல்லாடலால் குறிப்பிட்டுள்ளார்கள். போர்நியோஸ் என்பது திருமணத்திற்கு அப்பாற் பட்டு நாம் ஈடுபடும் எல்லா பாலியல் செயல்பாடுகளைக் குறிக்கும். இருவரை ஒரே உடலாய் ஒன்றினையச் செய்யும் ஆற்றல் பாலியல் உறவிற்கு உள்ளதென இவ்வசனம் கூறுகிறது. இவ் உறவு, இருவருக்கு இடையில் நெருக்கத்தை உண்டாக்குகிறது; எனவே தான் அதை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதனாலேயே தேவன், நாம் திருமணத்தில் இணைக்கப் பட்ட நமது துணையோடு மட்டும் இவ்வுறவைக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்.

கற்பணைகள் மற்றும் நியாயப் பிரமாணம் எல்லாமும் எதற்காக? எவ்வாறு நாம் தேவனின் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்?

ஏற்கனவே திருமணம் ஆன ஒருவரோ அல்லது இருவரோ சேர்ந்து பாலியல் உறவில் ஈடுபடுவதே பாலியல் ஒழுக்கக் கேடு ஆகும்

ஏன் பாலியல் ஒழுக்கக் கேடு தவறு?

அதன் விளைவு என்ன?

 

பாலியல் ஒழுக்க கேட்டின் விளைவுகள்.

– கடுமையான, நிரந்தரமான பாலியல் தொற்று நோய்கள் வழியாக உடலால் உங்களுக்கும், அடுத்தவருக்கு துன்பம் ஏற்படுத்துதல். உதாரணத்திற்கு கிளாமைடியா என்கிற நோய் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். அதே போல கருப்பை வாய் புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்பு உள்ளது.

– முன்பு நடந்த கசப்பான நிகழ்வுகளால், யாரையும் நம்பவோ அன்பு செய்யவோ முடியாமல் போகுதல்.

– தேவையற்ற கர்ப்பம் தரித்தல் அதை கருச் சிதைவு செய்தல் (கருச் சிதைவு கருப்பை வாய் புற்றநோய் உண்டாக்கும்)

– குற்ற உணர்வு & வெட்கம்

பாலியல் குறித்த தவறான எண்ணங்கள்.

– “காம விகாரமும், பாலியல் ரீதியில் பார்ப்பதும் தவறில்லை” என்ற தவறான எண்ணம் (மத்தேயு 5:28)

 

– “எதையும் ஏற்றுக் கொள்ளலாம்” என்கிற (பொறுப்பற்ற) தவறான மனப்பான்மை (நீதிமொழிகள் 15:10)

 

– “நிதர்சன வாழ்க்கையில் இருந்து தப்பிக்க பாலுறவு கொள்ளலாம்” என்ற தவறான எண்ணம் (detachment) (நீதிமொழிகள் 14:27)

 

– “இதைத் தானே எல்லாரும் செய்கிறார்கள்?” என்ற தவறான மனநிலை (ரோமர் 12:2)

 

– “வாகனங்கள் வாங்குமுன் test drive செய்வதில்லையா? அது போல தான்” என்கிற தவறான எண்ணம் (நீதிமொழிகள் 26:18‭-‬19)

 

– இவரை/இவளை தானே திருமணம் செய்து கொள்ள போகிறேன், எனவே திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளலாம்” என்ற தவறான எண்ணம்

 

– “ஒருவேளை, திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவிற்கு மறுத்தால் என்னுடைய வாழ்க்கைத் துணை என்னை நிராகரிக்க கூடும்” என்ற தவறான எண்ணம். (நீதிமொழிகள் 11:22)

 

– “கன்னித் தன்மையை விட்டுக்கொடுப்பது சரி” என்ற தவறான எண்ணம். (நீதிமொழிகள் 16:17)

 

– “செல்வதிற்காக, பொருளுக்காக, வசதிக்காக உறவு கொள்ளுதல் சரி” என்ற தவறான எண்ணம் (நீதிமொழிகள் 5:16-18)

 

– “நான் அப்படி தான், நான் இதற்கு அடிமை” என்ற தவறான எண்ணம் (நீதிமொழிகள் 15:10)

 

– “இருவரும் இணைந்து வெளியில் சுற்றினோம்; அவள் விரும்பினாள், எனவே இதுவும் நடந்து விட்டது” என்கிற தவறான எண்ணம் (நீதிமொழிகள் 14:22)

 

ஏன் தேவன் நமது உடலைக் குறித்து அக்கறை கொள்கிறார்?

மேலே கூறப்பட்டுள்ளவைகளை காணும் போது, தேவன் நமது உடலைக் காத்துக் கொள்ள வேண்டும் என விரும்புவதில் பல நன்மைகள் உள்ளன. ஆனால் இன்று வளர்ந்த சமுதாயத்தில் இவ்வுறவின் மீதுள்ள ஆர்வமும், முயற்சி செய்துவிட வேண்டும் என்கிற அழுத்தமும் உள்ளதை மறுக்க முடியாது. வாழ்வின் பிந்தைய நாட்களில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களுக்கு திருமணத்தையும், பாலுறவைவும் தேவன் படைத்த விதத்தை அறியாமல் இருந்திருக்கிறார்கள் . பல இளைஞர் இளம்பெண்கள் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் தவறில்லை என்ற எண்ணமுடையவர்களாக இருந்துள்ளார்கள். ஒருவேளை இது உங்களுக்கும் பொருந்தலாம். திருமணத்தின் கொடையை, அதற்கு முன்பே உடைத்தற்காக வருந்தலாம். ஒருவேளை நீங்கள் எடுத்த தவறான முடிவுகள், எண்ணங்களால் தற்போது திருமணத்தைக் குறித்து பயத்தோடு இருக்கலாம் அல்லது அதை அருவருப்பாக எண்ணலாம்.

நீங்கள் ஏற்கனவே தவறு செய்திருந்தால், என்ன செய்யலாம்?

(குறிப்பு: நீங்கள் ஒருவேளை பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டிருந்தால், அது உங்கள் தவறில்லை! ஆனால், தேவனிடம் உங்களை தூய்மைப் படுத்த மன்றாடலாம். இவ்வாறு செய்வதால், நீங்கள் மனதார நம்பும் (சபை ஊழியர்) தலைவரிடம் மனம் விட்டு பேச உதவியாய் இருக்கும்)

தேவனின் தூய்மை

எவ்வாறு தேவன் நம்மை மீண்டும் தூய்மை ஆக்குகிறார்?

நண்பனிடம் கேள்

உங்களைப் பொறுத்த வரை இச்சை அடக்கம் எவ்வளவு முக்கியமானது? ஏன்?

வாழ்க்கை நடைமுறை

உடல் தூய்மையோடு இருக்க எப்போதாவது தேவனின் உதவியை நாடி உள்ளீர்களா?

உடல் தூய்மையை எவ்வாறு உங்கள் வாழ்வில் முக்கியப் படுத்துவது?

மாதிரி ஜெபம்

ஆண்டவரே, பாலுறவு என்ற கொடைக்காக நன்றி! இக்கொடையை திருமணம் வரை பாதுகாத்துக் கொள்ள எனக்கு உதவும். என்னையும், என் எண்ணங் உம்மிடம் அர்ப்பணிக்கிறேன்; உம்முடைய வழிகளில் வாழ எனக்கு உதவும்.

வசனம்