தேவனோடு உரையாடுதல்
ஜெபம் என்பது தேவனோடு நாம் உரையாடுதல். எந்த ஒரு உறவுக்கு நடுவிலும் உரையாடல் எவ்வளவு அவசியமோ, அதே போல தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவில் உரையாடல் மிக மிக அவசியம். நாம் அவரோடு எந்நேரமும் உறவாட வேண்டுமென தேவன் விரும்புகிறார்.
இயேசு எவ்வாறு ஜெபித்தார்? (ஆண்டவரின் ஜெபம்)
(5) அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(6) நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
(7)அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
(8) அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
(9) நீங்கள் ஜெபம்பண்ணவேண்டியவிதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.
(10) உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
(11) எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
(12) எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
(13) எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்.
நாம் எவ்வாறு ஜெபிக்க வேண்டும்?
நாம் எவ்வாறு ஜெபிக்க கூடாது?
எதற்காக ஜெபிக்க வேண்டும்? கீழுள்ள தலைப்புகளோடு சரியான வசனத்தை எழுதிக் கொள்ளவும்.
- தேவனை மகிமைப் படுத்த
- தேவனுடைய ராஜ்யதிற்கும் மற்றவைகளுக்கும்.
- நமக்காக
- மன்னித்தல் (சுத்தமுள்ள இதயம்)
ஆற்றல் மிகுந்த ஜெபம்
எவ்வாறு நமது ஜெபத்தை ஆற்றல் மிக்கதாக மாற்றலாம்?
நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
உங்கள் நினைவுகளை ஜெபங்களாக மாற்றுங்கள்
ஜெபிக்கும் வாழ்க்கை முறை
நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
எவ்வாறு நமது நினைவுகளை ஜெபங்களாக மாற்ற முடியும்?
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
எவ்வளவு அடிக்கடி நாம் ஜெபிக்கலாம்?
எப்போது நாம் ஜெபிக்க வேண்டும்?
நண்பரிடம் கேள்
- எங்கே, எப்போது நீங்கள் ஜெபிக்கிறீர்கள்? எதைக் குறித்து ஜெபிக்கிறீர்கள்?
- ஜெபதைக் குறித்து நீங்கள் கொண்டுள்ள வேறு கேள்விகள் என்னென்ன?
- நீங்கள் ஜெபிப்பதற்கு சிறந்த இடம் மற்றும் நேரம் எது?
- உங்கள் ஜெபங்களுக்கு பதில் பெறுகிறீர்களா?
வாழ்க்கை நடைமுறை
- ஒன்றைக் குறித்து தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். (எ.கா.: மீட்டுக்கொண்டதற்காக)
- மற்ற ஒருவருக்காக ஜெபியுங்கள் (எ.கா.: குடும்ப நபர், நண்பர்)
- ஜெபத்தில் கேட்க ஒரு காரியத்தை நினைத்துக் கொள்ளுங்கள். (எ.கா.: தேர்வு)
மாதிரி ஜெபம்
இயேசுவே, என் ஜெபங்களைக் கேட்பதற்காக நன்றி. நீர் என் ஜெபங்களுக்கு பதில் அளிக்க வல்லவர் என அறிந்து, என் ஜெபங்களை உம்மிடம் ஒப்படைக்கிறேன்.
வசனம்
ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.