நாம் அடிக்கடி கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வது உண்டு. யோவான் 10:10 முதல் பகுதியில், “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனத்தில் திருடன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது சாத்தானையே. எனினும், நாம் வீழ்த்தப்படுவதில்லை! இவ்வசனத்தின் இறுதியில் “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” என கூறப்பட்டுள்ளது. இயேசுவே இதைக் கூறினார்! நாம் எப்போதும் இயேசுவையே நோக்கி இருந்து, மன உறுதியோடும், நன் மனப்பான்மையோடும் இருக்கும் போது, நாம் இன்னும் அதிக ஆற்றலோடு வளர்கிறோம். நம் வாழ்வும் ஆசீர்வதிக்கப்படும்.
(10) திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
ஆம் நாம் போராடுகிறோம், ஆனால் சக மனிதர்களோடு அல்ல!
(12) ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு
(13) ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
(14) சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
(15)சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;
(16) பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
(17) இரட்சணியமென்னும் தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
(18) எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனவுறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.
நாம் யாருக்கு எதிராக போராடுகிறோம்?
அ) உங்கள் எதிராளனுக்கு எந்தவித இடமும் கொடுக்காதீர்கள்.
(10) எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.
(11) சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.
சாத்தான் தன் தந்திரங்களை கொண்டு நம்மை ஏமாற்ற முடியாது. ஏன்?
நம்மை ஏமாற்ற, சாத்தான் செய்யும் சில தந்திர வழிகள் எவை?
(26) “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்”; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;
(27) பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.
எது நம்மை பாவத்தில் விழச் செய்யும்?
ஏன் மன்னிக்க வேண்டும்? அதன் முக்கியத்துவம் என்ன?
(2) ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று.
(3) துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன்.
இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ள “அடிகள் சறுக்குதல்” என்ற வார்த்தை எதைக் கூறுகிறது?
இவ்வசனத்தில் உள்ள நபருக்கு என்ன நேர்ந்தது?
ஆ) சாத்தானுக்கு அல்ல உங்களுக்கு இடம் கொடுங்கள்.
(15) இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்.
நமக்கு எதிராக எழும்பும் சாத்தானுக்கு என்ன நேர்கிறது?
(15) நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
(16) ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
நாம் தேவையில் உள்ளபோது யாரைத் தேடிச் செல்ல வேண்டும்? ஏன்?
(7) நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
(8) இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
நாம் மன உறுதியோடு இருக்கும் போது என்ன நிகழ்கிறது?
நண்பரிடம் கேள்
எவையெல்லாம் நம் வாழ்க்கையில் “அடி சருக்குதலாக” இருக்கிறது?
நீங்கள் உங்கள் வாழ்வில் சாத்தானுக்கு எந்த வகையிலும் வாய்ப்போ அல்லது இடமோ தருகிறீர்களா?
வாழ்க்கை நடைமுறை
இதைப் போன்ற காரியங்களில் உதவி செய்யும் பொருட்டு, எவ்வாறு இயேசுவை நோக்கி பார்க்கிறீர்கள்?
மாதிரி ஜெபம்
இயேசுவே, என் கடினமான சூழ்நிலைகள் உமக்கு தெரியும். உறுதியாய் நிலைத்து நிற்க எனக்கு உதவும். நன் மனப்பான்மையும், நல்ல அணுகுமுறையும் கொள்ள எனக்கு ஆற்றல் தாரும்.
வசனம்
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.