Building Strong Foundations

நம்பிக்கை



நம் கண்களால் காண முடியாதவை நிகழும் என்ற பரிசுத்த ஆவியானவரின் அறிவுறுத்தலே நம்பிக்கையாகும். வேதம் இவ்வாறு கூறுகிறது:

இந்த வெளிப்பாடு, வாழ்வில் செயல்பாடோடு தொடர்கிறது. நம்பிக்கை என்பது ஒரு செயல்பாட்டு வார்த்தை; அதுவே நாம் இயேசுவின் மீது கொண்டுள்ள விசுவாசத்தின் அடித்தளம் ஆகும்.

“விசுவாசத்தின் தந்தை”

வேதம் ஆபிரகாமை “விசுவாசத்தின் தந்தை” என அழைக்கிறது. தனது மனைவி குழந்தைப் பேறு இல்லாதவராய் இருந்தும், இனி அதற்கு வாய்ப்பில்லை என்று அறிந்தாலும், தேவன் தன்னை “பல நாடுகளுக்கு தந்தை ஆக்குவேன்” என்று வாக்களித்ததை நம்பி, பெற்றுக் கொண்டார். தேவன் அருளிய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என்று உறுதியாகவும் இருந்தார்.

ஆபிரகாம் நமக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! அவருடைய நம்பிக்கையைக் குறித்து ரோமர் 4:13-21ல் வாசிக்கலாம்.

அவர் எவ்வாறு இந்த வாக்குத்தத்தை பெற்றுக் கொண்டார்?

ஆபிரகாம், சாராவின் உடல்நிலை எவ்வாறு இருந்தது?

எவ்வாறு ஆபிரகாம் தனது உடல்நிலை குறித்த உண்மைகளுக்கு பதிலளித்தார்?
இந்நிகழ்விலிருந்து நம்பிக்கை குறித்து நாம் கற்றுக் கொள்வது என்ன?

நம்பிக்கை குறித்து..

எவ்வாறு நம்பிக்கையை பெற்றுக் கொள்கிறோம்?

எவ்வாறு நாம் மீட்பை பெற்றுக் கொள்ள முடியும்?

நீதிமான் எதனால் வாழ்கிறார்?

நமது நம்பிக்கையை எவ்வாறு உறுதிப்படுத்தலாம்?

பெரிய காரியங்களும், அரும் அடையாளங்களும் நமது பிதாவிற்கு மகிமை அளிக்கவும், நமது நம்பிக்கையை அதிகப் படுத்தவும் உதவுகிறது. நீங்கள் கண்ட எந்த அரும் அடையாளங்கள் உங்கள் நம்பிக்கையை வளர்க்க உதவிற்று?

நம்பிக்கையோடு எதுவும் சேர்ந்து இருத்தல் வேண்டும்?

நம்பிக்கையில் வரும் சோதனை எதை உருவாக்கும்?

நண்பரிடம் கேள்

வேதத்திலிருந்து தேவன் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வார்த்தையோ அல்லது வாக்குத்தத்தமோ அளித்துள்ளாரா?

தேவனின் வாக்குத்தத்ததை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

வாழ்க்கை நடைமுறை

எவ்வாறு எனது நம்பிக்கையை அதிகப்படுத்த முடியும்?

மாதிரி ஜெபம்

இயேசுவே, உமது வார்த்தை உண்மையுள்ளது, எனவே நன்றி! உமது ஆற்றலால் நீர் எனக்கு அளித்த வாக்குத்தத்தம் நிறைவேறும் என நம்பி அதை உறுதியாக பிடித்துக் கொள்கிறேன்.

வசனம்

போதகர் ராட் அவர்களின் கற்பித்தலை யூடுயூபில் இங்கு காணலாம்.
Study Topics