வேதம், “மனம் திரும்புதலும், இயேசுவை நம்புவதும் ஒருவரை மீட்கும்” எனக் கூறுகிறது! ஞானஸ்நானம் என்பது இயேசு மீது நாம் கொண்ட நம்பிக்கையை வெளிப்படையாக அறிவிக்கும் செயல். நாம் இயேசுவை ஏற்றுக் கொண்ட பின் செய்ய வேண்டிய முதல் செயல் இதுவே!
(15) பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
(16) விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க மொழியில் இந்த “ஞானஸ்நானம்” (“Baptisma”) என்ற சொல்லுக்கு தண்ணீரில் முக்குதல், மூழ்குதல், குதித்தல் என்று அர்த்தம்.
ஏன் ஞானஸ்நானம்?
இது ஒரு அன்பு கட்டளை!
(18) அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
(19) ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.
(20) இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.
இயேசு, நம் எல்லோருக்கும் ஒரு முக்கிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார்! அது என்ன?
புதிய கட்டுப்பாட்டின் கீழ் (உரிமை)
நாம் இந்த உலகத்தைச் சேர்ந்து இருந்தோம். இப்போது நாம் இயேசுவிற்கு சொந்தமானவர்கள்.
(2) அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.
(3) அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.
(4) தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,
(5) அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
(6) கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,
(7) கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.
முன்பு நாம் யாருக்கு கீழ் இருந்தோம்?
இப்போது யாருக்கு கீழ் உள்ளோம்?
நமது புதிய அடையாளம்
ரோமர் 6:3-4
(3) கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
(4) மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
கலாத்தியர் 2:20
(20) கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
ஞானஸ்நானதில், தண்ணீரில் மூழ்கும் பொது நாம் கிறிஸ்துவோடு, ஆவியில் புதைக்கப்படுகிறோம். மீண்டும் எழும் போது, அவருடைய உயிர்த்தெழுதலில் பங்கு கொள்கிறோம். நமது பழைய வாழ்க்கை தண்ணீர் எனும் குழியில் புதைக்கப்படுகிறது. கிறிஸ்துவோடு இணைந்த இந்த புது வாழ்வைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பாவத்தின் பிறப்பிடதை “அணைத்து வைத்தல்”
(11) அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.
(12) ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.
நாம் ஞானஸ்நானம் பெறும் பொது பாவம் என்ன ஆகிறது?
எப்போதாவது, எங்காவது, யாராவது ஞானஸ்நானம் பெற்றுள்ளர்களா?
(37) இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.
(38) பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
(39) வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;
(40) இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
(41) அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
பேதுருவும், சீடர்களும் 3000 நபர்களுக்கு ஞானஸ்நானம் அளித்துள்ளார்கள். அதுவும் மறு கணமே!
(36) இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான். (37) அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;
(37)
(38) இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான்.
(39) அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.
பாலைவனத்தில், பிலிப்பு எத்தியோப்பிய மந்திரிக்கு ஞானஸ்நானம் அளித்தார். எப்போது? உடனே!
(44) இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். (45) அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும்,
(45) பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.
(46)
For they heard them speaking in tongues and praising God.
Then Peter said,
(47) அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,
(48) கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.
செசாரியாவில், பேதுருவும் மற்ற சகோதரர்களும் கொர்னேலியுவின் வீட்டாருக்கு ஞானஸ்நானம் அளித்தார்கள். எப்போது? அதே நாளில்!
(32) அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.
(33) மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
(34) பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்.
பிலிப்பியில், பவுலும் சீலாவும் பிலிப்பிய சிறை அதிகாரிக்கு ஞானஸ்நானம் அளித்தார்கள். எப்போது? அதே நேரத்தில்!
பேதுருவால் ஒரே நாளில் 3000 பேருக்கு ஞானாஸ்தானம் அளிக்க முடியுமா? இது யார் செயல் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
யார் ஞானநாஸ்னம் பெற்றுக் கொண்டார்கள்?
எங்கு?
எப்போது?
யாருடைய பெயரில் ஞானஸ்நானம் அளிக்கப்பட்டது?
ஏன் இயேசுவின் பெயர் ஆற்றல் வாய்ந்தது?
(18) அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
(19) ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.
(20) இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.
(47) அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, (48) கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.
(48)
So he ordered that they be baptized in the name of Jesus Christ.
Then they asked Peter to stay with them for a few days.
(9) ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.
(10) மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.
தேவனின் முழு உருவ வடிவே இயேசு. மத்தேயு 28: 19ல், இந்த முழுமை பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என விவரிக்கப்பட்டுள்ளது.
(19) ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.
நண்பரிடம் கேள்
ஏன், எங்கு, எப்போது நீங்கள் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டீர்கள்?
வாழ்க்கை நடைமுறை
நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டு, இன்னமும் ஞானஸ்நானம் பெறாமல் இருந்தால், இப்போது பெற்றுக் கொள்ள தயாரா?
மாதிரி ஜெபம்
இயேசுவே, நாங்கள் உம்மீது கொண்ட நம்பிக்கையை வெளிப்படையாக அறிவிக்கும் பொருட்டு ஞானஸ்நானம் எனும் வாய்ப்பை தந்ததற்காக நன்றி! ஞானஸ்நானத்தின் ஆற்றலை அனுபவிக்க எனக்கு உதவும்.
வசனம்
“மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.”
போதகர் ராட் அவர்களின் கற்பித்தலை யூடுயூபில் இங்கு காணலாம்.