ஒரு தந்தையின் பாசம்
நம்மை எந்த அளவிற்கு அன்பு செய்கிறார் என்று காட்டவும், நாம் ஒருவேளை தவறு செய்து விட்டு திரும்பி வந்தால், எப்படி நம்மை ஏற்றுக் கொள்கிறார் என்பதை உணர்த்தவும் இக்கதையை இயேசு கூறினார்.
தன் மனம் போன போக்கில் சென்ற மகன்
(11) பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.
(12) அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.
(13) சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.
இளைய மகன் எப்படி பட்ட நபர்?

(14) எல்லாவற்றையும் அவன் செவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,
(15) அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
(16) அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
இளைய மகன் என்ன செய்தான்? அவனுக்கு என்ன நடந்தது?
மகன் புத்தி தெளிகிறான்
(16) அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
(17) அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
ஏன் தன் தந்தையின் இல்லத்திற்கு செல்ல முடிவு செய்தான்?
(15) அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
(16) அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
(17) அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
(18) நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.
தன் தந்தைக்கும், பரத்திற்கும் எதிராக என்ன பாவம் செய்தான்?
(19) இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
வீட்டில் எப்படிப்பட்ட வரவேற்பை எதிர்பார்த்து இருந்தான்?
மறுபடியும் மகனாகவே ஏற்றுக் கொள்ளப் பட்டான்
(17) அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
(18) நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.
(19) நான் இனி உங்கள் மகன் என்று அழைக்கப்படும் தகுதி இல்லை; என்னை உங்கள் கூலிவேலைக்காரர்களில் ஒருவராக ஆக்கிக்கொள்ளுங்கள்.
(20) எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.
(21) “குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.
தான் பாவம் செய்ததை உணர்ந்த மகன் என்ன செய்தான்?
(20) எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.
(21) குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.
(22) அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
(23) கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.
(24) என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.
தந்தை தனது மகனை ஏற்றுக்கொண்டாரா? இது நமக்கு எப்படித் தெரியும்?
தந்தையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நண்பரிடம் கேள்
தேவன் உங்களை மன்னித்து ஏற்றுக் கொண்டாரா? அதைப் பற்றி கூற முடியுமா?
இந்தக் கதையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இந்த கதை நிஜ வாழ்க்கையைப் போன்றதா?
வாழ்க்கை நடைமுறை
தேவனிடம் திரும்பிச் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும்?
இதைப் போன்ற மன்னிப்பை ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?
மாதிரி ஜெபம்
தந்தையே, என்னை எப்போதும் அன்பு செய்து, மன்னித்து, ஏற்றுக் கொண்டதற்காக நன்றி. உமது அன்பு அளப்பரியது!
வசனம்
“பிதா நம்மை தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கவேண்டும் என்று, நம்மீது வைத்திருக்கும் அன்பு எவ்வளவு பெரியது! நாம் என்ன! உலகம் நம்மை அறியாததற்கு காரணம், அது அவரை அறிந்திருக்கவில்லை என்பதுதான்.”