தேடி கண்டு கொண்டார்!
இயேசுவைக் எப்படியாவது கண்டுவிட வேண்டுமென, மிகுந்த ஆர்வத்தில் மரத்தின் மீது ஏறியவர் சகேயு. ஆனால், அதே நேரம் இயேசுவும் சகேயுவைத் தேடி வந்திருந்தார். அக்கணமே சகேயுவின் வாழ்க்கை முற்றிலும் மாறிற்று!
லூக்கா 19:1-10
(1) அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,
(2) ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,
(3) இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,
(4) அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
(5) இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
(6) அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டுபோனான்.
(7) அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.
(8) சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
(9) இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.
(10) இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
இயேசுவைத் தேடுதல்
சகேயு எப்படி பட்ட மனிதர்?
சகேயு ஏன் இயேசுவைக் காண ஆர்வமாய் இருந்தார்?
இயேசுவால் கண்டு கொள்ளப்பட்டார்
இயேசு அவரிடம் பேசிய போது, சகேயு எவ்வாறு உணர்ந்திருப்பார்?
எந்த விதத்தில் சகேயு வழி தவறிப் போயிருந்தார்?
இயேசுவால் மீட்கப்பட்டார்
இயேசுவை சந்தித்த தருணத்தில் சகேயு எப்படி மாறினார்? ஏன் மாறினார்?
ஏன் இயேசு, சகேயுவிற்கு இரட்சிப்பு வந்தது என்று சொன்னார்?
நண்பரிடம் கேள்
நீங்கள் இயேசுவை எப்படி சந்தித்தீர்கள்?
இயேசுவை சந்தித்த பின் உங்கள் வாழ்க்கை எவ்வாறு மாறியது?
வாழ்க்கை நடைமுறை
எவ்வகையில் நாம் வழிதவறி செல்ல வாய்ப்புள்ளது?
இயேசுவை சந்திக்க விருப்பம் கொள்கிறீர்களா?
மாதிரி ஜெபம்
இயேசுவே, நீர் என்னைத் தெரிந்து கொண்டு, அன்பு செய்வதற்காக நன்றி. நான் உம்மை இன்னும் அதிகமாய் தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள எனக்கு உதவும். உம்மை எனக்கு வெளிப்படுத்தும்.
வசனம்
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.