#RelationshipGoals

உட்பிரிவு 1 (ஆ): ஆண்கள் பெண்களில் எதிர்பார்ப்பது என்ன?



1. தேவனை நேசித்தல், சக மனிதர்களை நேசித்தல், தன்னை நேசித்தல்.
2. மன உறுதி

நீங்கள் வேத குறிப்பு எடுக்கிறீர்கள், ஜெபிக்கிறீர்கள், ஊழியம் செய்கிறீர்கள், உங்கள் வாழ்வில் தரிசனமும், நோக்கமும் உள்ளது.

3. நல்ல தோற்றம்

நல்ல தோற்றம் என்றால் எதை குறிக்கிறது? கீழே கூறப்பட்டுள்ள வகையில் ஒருவர் தனது வெளித்தோற்றத்தையும் நன்கு பராமரித்து, கவனித்து கொள்கிறார் என்றால் அதுவே நல்ல தோற்றம்.

1) எப்போதும் நல்ல ஆடைகளையும், அதற்கேற்ற காலணிகளையும் அணிதல். உங்கள் கால்களுக்கு ஏற்ற காலணிகளை தேர்வு செய்யுங்கள். இதில் இன்னும் உங்களுக்கு குழப்பம் இருந்தால், உங்கள் நண்பரிடம், அவர்களுடைய நேர்மையான கருத்தை கேட்டுத் தெளிந்து கொள்ளுங்கள். உங்கள் நிதிநிலைக்கு ஏற்ப பல வடிவங்களில் காலணிகள் கிடைக்கிறது!

2) நீங்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்றால் மட்டும் பெரிய அளவிலான ஆடையை அணியுங்கள், இல்லையேல் முற்றிலும் தவிர்த்திடுங்கள்.

3) நவீன ஆடை வடிவமைப்பு என்கிற பெயரில் விகாரமான ஆடைகளை அணியாதீர்கள். பொதுவாகச் சொன்னால், அவ்வாறு அணியும் போது, நீங்கள் எப்படி பட்ட நல்ல குணநலன்களைக் கொண்டிருந்தாலும், அது ஆண்களின் பார்வையில் படாது!

4) பல நிறங்கள் கொண்ட ஆடைகளை அணியலாம். ஆனால், அதிகம் வடிவங்களை உள்ளவற்றை தவிருங்கள். ஏனெனில், சில நேரங்களில் அதிக வடிவங்களும், பூக்களும் வெற்றியைத் தருவது இல்லை.

5) தலை முடியை சுத்தமாகவும், ஓரளவிற்காவது அழகுபடுத்திக் கொள்ளுங்கள். முடியில் “பளிச்”சென வர்ணங்களைப் பூசாதீர்கள். எல்லா ஆண்களுக்கும் அது பிடிக்கும், என சொல்ல முடியாது.

6) சிறிது அழகு சாதனபொருட்களை உபயோகிக்கலாம். அதில் உங்களுக்கு பெரிய அளவில் அனுபவமோ அல்லது விருப்பமோ இல்லையெனில், சாதாரண தோற்றத்தோடு இருக்கலாம், தவறில்லை. உங்களுடைய நிதிநிலைக்கு ஏற்ற, பல முன்னணி நிறுவனங்களின் அழகு சாதனப்பொருட்கள் உண்டு. அவற்றை தேர்வு செய்யலாம். இவையெல்லாம் ஒரு முதலீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. தேவனை சார்ந்து இருத்தல்

ஒவ்வொரு பெண்ணும், தன்னை ஒரு ஆண் முற்றிலும் புரிந்து கொண்டு முழுமையாக அன்பு செய்ய வேண்டும் என விரும்புவாள். ஆனால், தேவன் மட்டுமே அதைச் செய்ய முடியும். “மிகச்சிறந்த ஆண்” என்று எவரும் இல்லை. எனவே இதையெல்லாம் ஒரு ஆண் செய்வார் என எண்ணியிருந்தால், ஏமாற்றம் தான் மிஞ்சும். ஏறக்குறைய எல்லா ஆண்களுக்கும் இது தெரியும். பெண்ணாகிய நீங்களும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, உங்கள் தேவைகளை நிறைவு செய்ய ஜெபத்தின் வழியாகவும், வேத குறிப்பு எடுப்பதன் வழியாகவும் தேவனை நோக்கிப் பார்த்திருங்கள்.

5. ஒருவர் தனது விருப்பத்தை தெரிவிக்கும் வண்ணம் இடம் கொடுங்கள்

எப்பொழுதும் உங்களைச் சுற்றி கோட்டை போல நண்பர்கள் பட்டாளத்தைக் கொண்டிருந்தால், உங்களை அணுக எவருக்கும் கடினமாக இருக்கும். எனவே, உங்கள் நட்பு வட்டாரத்தை தாண்டி மற்றவர்களையும் சந்தித்து பேசி, அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். தன் வட்டத்திற்குள் மற்றவர்களையும் ஏற்றுக்கொள்ளவும், அவர்களோடு சவுகரியமாக வெளியில் செல்லும் பெண்ணாக நீங்கள் இருங்கள்.

கேள்வி

எவ்வாறு உங்களை அதிகம் மேம்படுத்தலாம்?

Study Topics